தமிழ் படங்களில் ஆர்வம் காட்டும் திவ்யபாரதி- ரசிகர்கள் மகிழ்ச்சி

திவ்யபாரதி, மீண்டும் தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,
'பேச்சுலர்' படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைய தலைமுறையினர் மனதில் ஆணி அடித்தது போல பதிந்தவர், திவ்யபாரதி. விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் தலைகாட்டி சென்றவர், மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து கவர்ந்தார். நீளமான கூந்தல் கொண்ட கதாநாயகியாக வலம் வரும் திவ்யபாரதி, சமூக வலைதளங்களில் தனது கலக்கல் படங்களை அவ்வப்போது வெளியிட்டு இளசுகளை வசியம் செய்து வருகிறார்.
திவ்யபாரதி மீண்டும் தமிழ் படங்கள் நடிப்பது எப்போது? என ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இதற்கிடையில் தெலுங்கில் மும்முரமாக இருக்கும் திவ்யபாரதி, மீண்டும் தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. புதிய கதைகளை கேட்டு வரும் அவர், 2 படங்களை ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அவர் தலைகாட்ட இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 'கம்பேக் திவ்யா' என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.






