

சென்னை,
பிரபல சின்னத்திரை நடிகை திவ்யங்கா திரிபாதி, தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் சந்தித்த கடுமையான சவால்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 'பானு மேன் தெரி துல்ஹன்' (Banoo Main Teri Dulhann) தொடரில் நடித்தபோது இருந்த பணிச்சுமை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
அவர் பேசுகையில், ‘தனது ஆரம்ப காலங்களில் படப்பிடிப்பு தளத்திலேயே வாழ்ந்தேன். ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் பல மணிநேரம் இடைவிடாது படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டியிருந்தது. கொஞ்சம் இடம் கிடைத்தாலும் அங்கேயே தரையில் படுத்து உறங்கிவிடுவேன். சில நேரங்களில் படுக்க இடமில்லை என்றால், ஒரு தூணில் சாய்ந்து நின்றபடியே சில நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேலைக்குத் திரும்புவேன்," என்றார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் திவ்யங்கா திரிபாதி, இன்றும் இந்திய சின்னத்திரையின் மிகவும் நேசிக்கப்படும் முகங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.