“மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது” - நடிகை நமீதா

மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
“மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது” - நடிகை நமீதா
Published on

நடிகை நமீதா 2 வருடம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அகம்பாவம் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் கடைசியாக மோகன்லாலுடன் நடித்த புலி முருகன் படம் 2016-ல் வெளிவந்தது. முன்பு போல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லை. இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வருகின்றன. அதுமாதிரி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க விரும்பினேன்.

அப்போதுதான் அகம்பாவம் கதையை டைரக்டர்கள் ஸ்ரீமகேஷ், வாராகி ஆகியோர் சொன்னார்கள். இப்போதையை சமூக விஷயங்களை உள்ளடக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பாலியல் புகார்களை பெண்கள் மீ டூவில் பதிவிட்டு வருகிறார்கள். இதை வெளிப்படுத்த தைரியம் வேண்டும்.

இதில் எது பொய், எது உண்மை என்று பார்க்காமல் முதலில் புகார் செய்யும் பெண்களை கவனியுங்கள். பெண்கள் சொல்வதை புறக்கணிக்காமல் காது கொடுத்து கேட்க வேண்டும். அதன்பிறகு அது உண்மையா, இல்லையா என்று தீர விசாரிக்கலாம். எல்லோருமே உண்மையை கண்டுபிடிக்கும் புத்திசாலிகள்தான்.

ஆனாலும் மீ டூ வை தவறாக பயன்படுத்த கூடாது என்பது எனது கவலையாக இருக்கிறது. இப்போது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். என்று நமீதா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com