12ம் வகுப்பு பொதுத்தேர்வில் “வாழை” படத்தில் நடித்த சிவனைந்தன் பெற்ற மார்க் எவ்வளவு தெரியுமா?

‘வாழை’ படத்தில் ‘சிவனைந்தன்’ கதாபாத்திரத்தில் நடித்த ‘பொன்வேல்’, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 506 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளான்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில்  “வாழை” படத்தில் நடித்த சிவனைந்தன் பெற்ற மார்க் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு மே 8-ந்தேதி இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படத்தில் நடிகை திவ்யா துரைசாமியின் தம்பியாக 'சிவனணைந்தான்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 509 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 75, வேதியலில் 77, வணிகவியல் 71, கணக்கியல் 93, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 84 என 600க்கு 509 மதிப்பெண், என நல்ல மதிப்பெண்ணை எடுத்துள்ளார். இந்த தகவலை நடிகை திவ்யா துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘என் தம்பி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டான்v என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

‘வாழை’ திரைப்படத்தில் 'சிவனணைந்தான்' ரோலில் நடித்த பொன்வேல் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு அவரின் நடிப்பு இருந்தது. அதே போல ‘வாழை’ படத்தில் திவ்யா துரைசாமி வேம்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com