கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படம் 4 நாட்களில் ரூ.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் 26வது படமான வா வாத்தியார்  கடந்த 14ம் தேதி வெளியானது. இயக்குனர் நலன் குமாரசாமி, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், வா வாத்தியார் படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com