சண்முக பாண்டியனின் “கொம்பு சீவி” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

சண்முக பாண்டியன் நடித்த ‘கொம்புசீவி’ படம் 2 நாட்களில் ரூ. 90 லட்சம் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுர வீரன், படை தலைவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடித்துள்ளனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம் கொம்புசீவி படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது.
இந்நிலையில், ‘கொம்புசீவி’ படம் 2 நாட்களில் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






