ஒரு மாதத்திற்கு மட்டும் எவ்வளவு செலவு தெரியுமா? பட்டியல் போட்ட நிதி அகர்வால்

நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் ஒரு மாதத்திற்கு மட்டுமே பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக கூறியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு மட்டும் எவ்வளவு செலவு தெரியுமா? பட்டியல் போட்ட நிதி அகர்வால்
Published on

பாலிவுட்டில் இருந்து தமிழ், தெலுங்கில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தனது முதல் தெலுங்குப் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு, ராம் பொதினேனி நடித்த 'இஸ்மார்ட் சங்கர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. தமிழில், 'ஈஸ்வரன்', 'பூமி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பில் மட்டுமின்றி, கிளாமரிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். தற்போது நிதி அகர்வால் பான்-இந்தியா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் மாத செலவு மட்டும் 5 லட்சம் ரூபாய் ஆவதாக கூறியுள்ளார். நிதி அகர்வால் கூறியதாவது:"மாதாந்திர ட்ராவல், தங்குதல், டயட், ஜிம், ட்ரெயினர், பார்லர் உள்ளிட்ட செலவுகள் மட்டும் மாதம் ரூ.5 லட்சம் வரை ஆகும். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மேக்கப், உடை, ஹேர் ஸ்டைலிங், போட்டோஸ் உள்ளிட்டவை சுமார் ரூ.1 லட்சம் வரை செலவாகும். அதை சில நேரங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் கொடுத்தாலும், சில நேரங்களில் நானே செலவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com