"காந்தா" படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
"காந்தா" படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான படம் 'காந்தா'. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் கலவையான விமர்சனங்களையும் கூறியுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.10.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று மற்றும் நாளை வார இறுதிநாட்கள் என்பதால் படத்தின் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com