அஜித் வாங்கிய நவீன கார்.. எவ்வளவு தெரியுமா?

கார் பிரியரான அஜித் உலகில் சிறந்த பிராண்டுகளின் கார்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அஜித் வாங்கிய நவீன கார்.. எவ்வளவு தெரியுமா?
Published on

நடிகர் அஜித் சினிமா நடிப்பு மட்டும் இன்றி மோட்டார் மற்றும் கார் பந்தய போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கார் பிரியரான அஜித் உலகில் சிறந்த பிராண்டுகளின் கார்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அவரிடம் உலக அளவில் பிரபலமான 10-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.

லம்போர்கினி ஜி.டி., மெக்லார்ன்சென்னா, பெராரி எஸ். எப்.90, போர்ஷே ஜி.டி.3.ஆர்.எஸ்., பி.எம்.டபிள்யு 740 எல்.ஐ., மெர்சிடிஸ் பென்ஸ் 350 ஜி.எல்.எஸ்., பெராரி 458 இத்தாலியா, ஹோண்டா அக்கார்டு வி6 உள்பட உலகில் அதிநவீன சொகுசு அம்சங்களை கொண்ட வேகமான மற்றும் விலை உயர்ந்த கார்கள் அஜித்குமாரிடம் இருக்கின்றன. அவரிடம் போர்டு கார் மற்றும் இல்லாமல் இருந்தது.

அந்தக் குறையை போக்கும் வகையில் அஜித் தற்போது போர்டு எப்150 ஜீரோ டிரக் மாடல் காரை வாங்கியுள்ளார். இந்தக் காரில் 3500 சிசி என்ஜின் மற்றும் 300 பி.எச்.பி. பவரை உற்பத்தி செய்யக் கூடிய வசதியும் உள்ளது. மேலும் 87 லிட்டர் எரிபொருள் தொட்டி 10 கியர்கள் என பல்வேறு வசதிகளுடன் ஆன்ரோடு மற்றும் ஆப் ரோடுக்காக நவீன வடிவில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அஜித் வாங்கியுள்ள இந்த காரின் விலை ரூ.1.10 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com