2 நாட்களில் “பைசன்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
2 நாட்களில் “பைசன்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Published on

மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.பைசன் படம் கடந்த 17ம் தேதி வெளியானது.

இந்நிலையில், பைசன் படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com