

பாண்டிராஜ் ‘பரிமளா & கோ’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘பரிமளா & கோ’. ஜெயராம் - ஊர்வசி கூட்டணி, பாண்டிராஜ் இயக்கம், மிஸ்கின் நடிப்பு என பல எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது இருந்தன. இப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியானது.இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு, பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்தது. முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ‘பரிமளா & கோ’ திரைப்படம் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.