ரீ-ரிலீஸான “கேப்டன் பிரபாகரன்” பட வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் கடந்த 22ம் தேதி 4கே தரத்தில் டிஜிட்டல் தரத்தில் ரீ-ரிலீஸானது.
ரீ-ரிலீஸான “கேப்டன் பிரபாகரன்” பட வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் 'கேப்டன் பிரபாகரன்'. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம்தான் விஜய்காந்திற்கு கேப்டன் என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் பிரபாகரன் படம் 34 ஆண்டுகள் கழித்து கடந்த 22ம் தேதி ரீ-ரிலீஸானது. இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்துடன் பார்த்தார். படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பிரேமலதா, கேப்டன் பிரபாகரன் படத்தில் கேப்டன் மாவீரன் போல் நடித்துள்ளார். இப்ப எடுத்த படம் போல் இருக்கிறது. மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார். 

ரீ-ரிலீஸில் முதல் மூன்று நாட்களில் கேப்டன் பிரபாகரன் ரூ. 1.25 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 34 ஆண்டுகளுக்கு பிறகு நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி உள்ள கேப்டன் பிரபாகரன் படம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தை, விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று இயக்குநர் பேரரசு, ஆர்வி உதயகுமார், செல்வமணி, மன்சூர் அலிகான் மற்றும் பல நடிகர்கள் ஒன்றாக சேர்த்து படம் பார்த்தனர். ஆட்டமா தோரோட்டமா பாட்டுக்கு இயக்குநர் பேரரசு தன்னையே மறந்து தன் அருகில் அமர்ந்து இருந்த மன்சூர்அலிகானுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு, மன்சூர் அலிகானுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com