பிக்பாஸ் 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி வாங்கப்போகும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?


பிக்பாஸ் 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி வாங்கப்போகும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
x

'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

சென்னை,

தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் 'பிக்பாஸ்' என்ற 'ரியாலிட்டி ஷோ' நடத்தப்பட்டு வருகிறது. டி.வி.யில் அது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் கடந்த 7 ஆண்டுகளாக 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் காரணமாக 7-வது சீசன் உடன் கமல்ஹாசன் நிறுத்திக்கொண்டார். தற்போது அவர் எம்.பி. ஆகிவிட்டார்.

அந்த வகையில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதற்காக அவருக்கு ரூ.60 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story