தங்கலான் குறித்து விக்ரம் கூறிய சுவாரஸ்ய பதில்..!

தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தங்கலான் குறித்து விக்ரம் கூறிய சுவாரஸ்ய பதில்..!
Published on

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் டீசர் நேற்று வெளியானது.

தங்கலான்' டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பேசியதாவது,

'பிதாமகன்', 'ஐ', 'இராவணன்' போன்ற படங்கள் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படங்கள். ஆனா. தங்கலானுடன் ஒப்பிடும் போது அதலாம் மூன்று சதவீதம் கூட இல்லை. இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சியும் கஷ்டமாக தான் இருந்தது. காதல் கூட வெறித்தனமான காதலாக தான் இருக்கும்.

இந்த மாதிரி தேடி தேடி அலையும் சில கதாபாத்திரங்கள் என்னை தேடி வரவில்லை என்பது தான் மிகப்பெரிய கஷ்டம். இந்த படம் குறித்து இரஞ்சித் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த படம் எங்களுடைய வாழ்க்கையின் சிறந்த படமாக இருக்கும் என்றார்.

ஆங்கிலேயர் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் கதையை இந்த படம் பேசுகிறது. மேலும், அந்த மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் அனுபவித்த துயரங்கள், அவர்களின் மகிழ்ச்சி என அனைத்து வித எமோஷனையும் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com