சூர்யா நடித்த “சீன்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சூர்யா, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘சீன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சூர்யா நடித்த “சீன்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on: 

சென்னை,

'சீன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.34.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'சீன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவம்பர் 6) இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

நேற்று அதிகாலை 6 மணிக்கு இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

போலீஸ் அதிகாரியாக சூர்யா

'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் 'சீன்'. இதில் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்துள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல் நாள் வசூல் எவ்வளவு?

இந்த நிலையில், 'சீன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.34.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக ரூ.22.5 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் சூர்யாவின் முந்தைய படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் வசூல் சாதனையை ரூ.2.51 கோடி வித்தியாசத்தில் ’சீன்’ முந்தியுள்ளது.

தீபாவளியைத் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X