ஒரு வாரத்தில் "கூலி" படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
ஒரு வாரத்தில் "கூலி" படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கூலி திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. இந்தப் படம் மூன்று நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக கடந்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக, இந்த சாதனையை விஜய்யின் 'லியோ' வைத்திருந்தது. இது ஐந்து நாட்களில் அதை எட்டியது. இதன் மூலம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு இருந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த வகையில், கூலி படம் ஒரு வாரத்தில் (7 நாட்களில்) உலகம் முழுவதும் ரூ. 435 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com