சிம்புவின் "அரசன்" படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு "அரசன்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சிம்புவின் "அரசன்" படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
Published on

சென்னை,

சிலம்பரசன் "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் "அரசன்" என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க சமந்தா, சாய் பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய முன்னணி நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் நடிக்க உள்ள கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com