'கோல்டன் ஸ்பேரோ' பாடலை எழுதியது யார் தெரியுமா?

'கோல்டன் ஸ்பேரோ' பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
'கோல்டன் ஸ்பேரோ' பாடலை எழுதியது யார் தெரியுமா?
Published on

சென்னை,

ப.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைந்திருக்கிறது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் இந்த படத்தின் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியாகும் தேதியை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அதன்படி இப்பாடல் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்தநிலையில் தற்போது இந்த பாடல் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த பாடலுக்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அதனை பாராட்டி நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com