என்னை திமிர் பிடித்தவள் என்பதா? - நடிகை டாப்சி

டாப்சி யாரையும் மதிப்பது இல்லை என்றும், திமிரோடு நடந்து கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன இதற்கு நடிகை டாப்சி விளக்கம் அளித்துள்ளார்.
என்னை திமிர் பிடித்தவள் என்பதா? - நடிகை டாப்சி
Published on

தமிழில் அதிக படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டாப்சி யாரையும் மதிப்பது இல்லை என்றும், திமிரோடு நடந்து கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

இதற்கு விளக்கம் அளித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், ''நான் நடிக்க வந்த புதிதில் அவ்வளவு முதிர்ச்சி இல்லை. கதைகளை தேர்வு செய்வதிலும் திறமை இல்லை. இப்போது கதை தேர்வில் நல்ல அனுபவம் ஏற்பட்டு உள்ளது. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய பட நிறுவனமாக இருந்தாலும் நடிக்க சம்மதிக்க மாட்டேன். நான் எதைப் பற்றியாவது பேசுவதற்கு முன் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராகவே சொல்லிவிடுவேன். நான் இப்படி பேசுவது சிலருக்கு பிடிப்பதில்லை. எனது பேச்சை புரிந்து கொள்ளாமல் எனக்கு திமிர் என்று கருத்து சொல்கிறார்கள். ஆனாலும் நான் அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டேன். எனக்கு தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் தான் நல்ல வாய்ப்புகள் வருகின்றன" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com