ஆப்ரேஷன் தியேட்டரில் ரசிகை சிகிச்சையின்போது ஒளிபரப்பப்பட்ட பவன் கல்யாணின் படம்

பவன் கல்யாண் ரசிகையின் மூளையில் இருந்த கட்டியை அகற்றியபோது, ‘ஓஜி’ படம் ஆப்ரேஷன் தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டது.
ஆப்ரேஷன் தியேட்டரில் ரசிகை சிகிச்சையின்போது  ஒளிபரப்பப்பட்ட பவன்  கல்யாணின் படம்
Published on

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கோடேஸ்வரம்மா(45) என்ற பெண் மயக்கம் மற்றும் வலிப்பு காரணமாக குண்டூர் மாவட்டம் வட்லமுடி என்ற கிராமத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் எடுக்கப்பட்டது. அதில் நரம்பியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் மிக முக்கியமான பகுதிக்கு அருகில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது.

அந்தக் கட்டியை ‘அவேக் கிரானியோட்டமி’ எனப்படும் சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் குழு முடிவெடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் போது நோயாளி விழிப்புடன் இருக்க வேண்டும், அப்படி இருக்கும் பட்சத்தில் நரம்பியல் செயல்பாடுகளை கண்காணிக்கவும், மூளையில் ஏற்படும் பாதிப்பு அபாயத்தைக் குறைக்கவும் மருத்துவர்களுக்கு உதவும். அதனால் சிகிச்சை முழுவதும் நோயாளி சுயநினைவுடன் இருக்க வேண்டும். இதனால் சிகிச்சைக்கு முன்பு நோயாளியின் விருப்ப நடிகர் குறித்து கேட்டறிந்த மருத்துக் குழு, நோயாளின் விருப்ப நடிகரான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ படத்தை லேப்டாப்பில் ஒளிபரப்பு செய்தனர். பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

சிகிச்சை நடுவே நோயாளி உடல் நலம் சரியாக இருக்கிறதா என்பதை கண்டறிய கை, கால்களை அசைக்குமாறு சில கட்டளைகளை இட்டு கவனித்து கொண்டனர். இது நோயாளியின் மூளை செயல்பாடுகளைப் பாதிக்காத வகையில் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவிற்கு உதவும். இதன் முறையே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து அந்த கட்டியை அகற்றினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com