

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்த ஹன்சிகா, சமீபத்தில் விவாகரத்து பெற்றார்.இதன்மூலம் இவர்களது 4 ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்தது. தற்போது ஆன்மிக பயணம் மேற்கொண்டு வரும் ஹன்சிகா, விரைவில் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹன்சிகாவிடம், சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் 'காஸ்டிங் கவுச்' கலாசார புகார்களை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.
இதற்கு ஹன்சிகா பதிலளிக்கையில், "உண்மையாக உழைத்தால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கவே நடக்காது. எனக்கு அந்த மாதிரி நடக்கவில்லை. மற்றபடி சினிமாவில் இப்படி ஒரு பிரச்சினை உள்ளதா? என்பது எனக்கு தெரியாது", என்றார். மேலும் நிறைய புகார்கள் நடிகைகள் தரப்பில் இருந்து வருகிறதே... என்ற கேள்விக்கு, “இதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஏனென்றால் எனக்குத் தெரியாது” என்று அவர் பதிலளித்து சென்றார்.