'டான் 3'-ல் இணையும் தனுஷ் பட நடிகை?

டான் 3 படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவிருந்தார்.
மும்பை,
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படங்கள் 'டான்' மற்றும் 'டான் 2'. தற்போது இதன் 3-ம் பாகம் உருவாக உள்ளது. இதில், ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். பர்ஹான் அக்தர் இயக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் இப்படத்திலிருந்து விலகியதாக தெரிகிறது.
இதனையடுத்து, கதாநாயகி குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அதன்படி, சமீபத்தில் ஷர்வாரி வாக் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாதநிலையில், தற்போது கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரித்தி சனோன் தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் நடித்து வருகிறார்.






