'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி திருமணம்!

‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி திருமணம்!
Published on

ஈரோடு,

விஜய்யின் 'தெறி', 'மெர்சல்' படங்களில் இயக்குநர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் படம் 'டான்'. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கலக்கியது. தெலுங்கு நடிகர் நானியுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியானது. இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 1ம் தேதி சிபி சக்ரவர்த்தியின் பேச்சுலர் பார்ட்டி நடத்தது. இதில் சிவகார்த்திகேயன், பாடகி சிவாங்கி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் சிபி சக்ரவர்த்திக்கு வர்ஷிணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது திரைப்பிரபலங்கள் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஈரோட்டில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த நிகழ்வில் அட்லி, எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com