

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழும் கங்கனா ரனாவத் - டாப்சி இடையே சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படுகிறது. பட விழாக்களில் கலந்துகொண்டால் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல், முகத்தை திருப்பி சென்று வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல், 'சீப் காப்பி' என்று டாப்சியை விமர்சித்து இருந்தார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டாப்சியிடம் கங்கனா ரனாவத் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு, "கங்கனா குறித்து இனி என்னிடம் கேட்காதீர்கள். அவரை பற்றி என்னிடமோ, என்னை பற்றி அவரிடமோ எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தாலே, எல்லா பிரச்சினைகளும் முடிந்துவிடும். அதை யாருமே செய்யாமல் இருப்பது ஏன்? விட்டுவிடுங்கள்” என்று டாப்சி பதிலளித்தார். மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல டாப்சி தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது.