அடுத்த பாகம் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்! - ஜேம்ஸ் கேமரூன்


அடுத்த பாகம் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்! - ஜேம்ஸ் கேமரூன்
x

அவதார் படத்தின் 3ம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’, ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ ஆகிய இரண்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் அவதார்: பயர் அண்ட் ஆஷ் என்ற படம் வெளியானது.

இந்த படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவதார் படத்தின் 4 வது பாகம் எப்போது வெளியாகும் என்று கேள்வி கேட்டார். அதற்கு, பிரசவம் முடிந்த பெண்ணிடம் அடுத்த குழந்தை எப்போது என யாராவது கேட்பார்களா? நான் இப்போதுதான் இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்திருக்கிறேன். அதற்குள் அடுத்த பாகம் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்! என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், அவதார் படம் மொத்த 5 பாகம் கொண்டதாக இருக்கும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். அதில் 4வது பாகத்தில் ஒரு பகுதி ஏற்கனவே தயாராகி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

1 More update

Next Story