திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள்.. சஞ்சனா கல்ராணி ஆவேசம்

திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு என நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள்.. சஞ்சனா கல்ராணி ஆவேசம்
Published on

சென்னை,

திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு என்று பாலிவுட் நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்ததைப் பேச, செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் திரிஷாவும் விதிவிலக்கல்ல. எனவே ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக அவரை மதியுங்கள் என்று சஞ்சனா கல்ராணி பேசியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன திரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா, சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் ஆவார். சமீபகாலமாகவே அவர் மீதான விமர்சனங்கள் பெரியளவில் அதிகரித்துள்ளன. ஆனாலும் விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் மனதுக்குப் பட்டதை செய்து வருகிறார், திரிஷா.

சஞ்சனா கல்ராணி ஆவேசம்

இதற்கிடையில் திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு என்று பாலிவுட் நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "சமீபகாலமாகவே திரிஷாவைக் குறிவைத்து பலரும் விமர்சிக்கிறார்கள். ஒரு பெண்ணைப் பற்றி இப்படி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. யூகங்கள் அடிப்படையில் ஒரு நடிகையை விமர்சிப்பது பெரும் தவறு.

தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்

திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு. தனக்கு பிடித்ததைப் பேச, செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் திரிஷாவும் விதிவிலக்கல்ல. எனவே ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக அவரை மதியுங்கள். வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்”, என்று குறிப்பிட்டார். சஞ்சனா கல்ராணி நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com