என்னுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.. எனக்கும் எதிர்காலம் உள்ளது - நடிகை பவித்ரா லட்சுமி


என்னுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.. எனக்கும் எதிர்காலம் உள்ளது - நடிகை பவித்ரா லட்சுமி
x
தினத்தந்தி 20 April 2025 5:13 PM IST (Updated: 20 April 2025 5:59 PM IST)
t-max-icont-min-icon

நடிகை பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

சென்னை,

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் 'ஓகே கண்மணி', 'நாய் சேகர்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்பது உண்மை இல்லை. அதே போல் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை. இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களுடைய பொழுது போக்கிற்காக என்னுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள். எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

1 More update

Next Story