முட்டாளின் பதிவுக்கு பதில் சொல்லாதீர்கள் - ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சூர்யா அறிவுரை

சென்னை பரணிபுத்தூரில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.
முட்டாளின் பதிவுக்கு பதில் சொல்லாதீர்கள் - ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சூர்யா அறிவுரை
Published on: 

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்து உங்கள் எனர்ஜியை வீணடிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, 1997-ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு நந்தா, காக்க காக்க, பிதாமகன், சிங்கம், ஏழாம் அறிவு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகிற தீபாவளி அன்று மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சீன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

நடிப்பைத் தாண்டி, தனது அகரம் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில், அதேபோல் சூர்யாவும் அரசியல் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், சூர்யா தரப்பில் அரசியல் வருகை தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கூட்டம்

சென்னை பரணிபுத்தூரில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, “அன்பை மட்டும் விதைப்போம். சமூக வலைதளத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவை போட்டான் என்பதற்காக நாமும் அதற்கு பதிலளிக்கும் போது தான், நாம் காயப்படுகிறோம். நாம் நாமாகவே இருப்போம். அவர் அவர்களாகவே இருக்கட்டும். நாம் எதுவும் பேச தேவையில்லை.

அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மாற்ற வேண்டும் என முயற்சி செய்தால் கொஞ்சம் கஷ்டம். சிலருக்கு புரியும். முக்கால்வாசி பேருக்கு அது புரியாது. உங்கள் எனர்ஜியை வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்ததை தினம் தினம் செய்யுங்கள். கண்டிப்பாக அதில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் அன்பை மட்டும் விதைப்போம்” என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com