இன்​ஸ்​டா​வில் பிட்​டான புகைப்படங்​களை போடுவதற்காக உங்​களை வருத்தி கொள்​ளாதீர் - நடிகை டாப்ஸி

அடிவ​யிறு கொழுப்பை குறைக்க தனது சக்​தி​யை​யும் மீறி கடுமையாக உடற்​ப​யிற்சி செய்​ததாக நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
இன்​ஸ்​டா​வில் பிட்​டான புகைப்படங்​களை போடுவதற்காக உங்​களை வருத்தி கொள்​ளாதீர் - நடிகை டாப்ஸி
Published on

இந்திய சினிமா உலகில் ஒரு கதாநாயகியாக டாப்ஸி தனக்கென ஒரு பெயரை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, அதன் பிறகு தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நீண்ட காலமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி, தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தொடர் வெற்றிகளைப் பெற்று பிஸியாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி திரையுலகில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

நடிகை டாப்​ஸி, இப்​போது இந்தி திரைப்​படங்​களில் நடித்​து​வருகிறார். அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் கடந்த பிப்​ர​வரி மாதம் வெளி​யானது. மேலும் 2 திரைப்​படங்களில் நடித்து வரு​கிறார். இதற்​கிடையே, அவர் தனது இன்ஸ்​டாகி​ராம் ஸ்டோரி​யில், “பிட்​டான புகைப்​படங்களைப் போடு​வதற்​காக தயவுசெய்து உங்​களை நீங்​களே வருத்திக் கொள்​ளாதீர்கள்” என்று இளம் பெண்​களுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து நடிகை டாப்ஸி “வள​ரும் பரு​வத்​தில் நான் ஆரோக்கிய​மாகவே இருந்​தேன். ஆனாலும் என் அடிவ​யிற்​றில் மட்​டும் ஏன் எப்​போதும் கொழுப்பு இருக்​கிறது என்​பது புரிய​வில்​லை. அதைக் குறைக்க வேண்​டும் என்​ப​தற்​காக, என் சக்​தி​யை​யும் மீறி கடுமையாக உடற்​ப​யிற்சி செய்​தேன். நாம் உடலை அளவுக்கு அதி​க​மாக வருத்​தும்​போது, ‘உடலுக்​குப் பாது​காப்பு தேவை’ என்​கிற எச்​சரிக்கை சிக்​னலை நம் மூளை கொடுத்துவிடும். இதனால், உடல் எடை குறைவதற்​குப் பதிலாக, உடல் தண்​ணீரைத் தக்​க வைக்க ஆரம்​பித்​து​விடும். இதனால் அந்த அடிவ​யிற்​றுச் சதை இன்​னும் அதி​கரிக்​கவே செய்​யும். அதனால் இதைப் பெண்​கள் செய்​யக் கூடாது. ஒவ்​வொரு பெண்ணின் உடலமைப்​பும் வெவ்​வேறானது.

ஒரு பெண்​ணின் உடல் பல ஹார்​மோன் மாற்​றங்​களைக் கடந்து செல்​வ​தால், தின​மும் வயிறு, ஒரே மாதிரி தட்டையாக இருக்க வேண்​டும் என்று எதிர்​பார்க்​கக் கூடாது. நான் என்​னைச் ‘சித்ரவதை’ செய்து கொண்ட பிறகே தாமத​மாக இதைப் புரிந்து கொண்​டேன். என்​னுடைய ஊட்​டச் சத்து நிபுணர்​தான் எனக்கு இதை விளக்​கி​னார். பெண்​களின் அடி வ​யிற்​றுப் பகு​தி​யில் தான் இனப்​பெருக்க உறுப்பு​கள் உள்​ளன. அவற்​றைப் பாது​காக்க அந்​தப் பகு​தி​யில் சிறிதளவு கொழுப்பு இருப்​பது மிக​வும் அவசி​யம். எனவே, இன்ஸ்டாகி​ராமில் பிட்​டான புகைப்​ படங்​களைப் போடுவதற்காக தயவு செய்து உங்​களை நீங்​களே வருத்திக் கொள்​ளாதீர்​கள்” என்று கூறி​யுள்​ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com