நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: என்னை பயங்கரவாதி போல நடத்துகிறார்கள்- நடிகை ரியா சக்ரபோர்த்தி

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், தன்னை பயங்கரவாதி போல நடத்துவதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: என்னை பயங்கரவாதி போல நடத்துகிறார்கள்- நடிகை ரியா சக்ரபோர்த்தி
Published on

மும்பை

நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் துபாயைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு இருந்ததா என்பதை விசாரிக்க டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு நேற்றிரவு மும்பைக்கு வந்துள்ளது.

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் குடும்பத்தினருடன் விசாரணை நடத்திய இக்குழுவினர் ரியாவையும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவ்வழக்கை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வரும் நிலையில் இதில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நியா சக்ரபோர்த்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், தன்னை பயங்கரவாதி போல நடத்துவதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில்,

சுஷாந்த்தை நான் உடனிருந்து பார்த்துக் கொண்டேன். அந்த மனிதத்தன்மை கூட யாருக்கும் இல்லை. தம்மீதான புகார்களால் தானும் தன்னுடைய குடும்பமும் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து உள்ளது.

என் வீட்டுக்கு வெளியே ஒரு கும்பல் இருக்கிறது. என் குடும்பத்திற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? முடிவுகள் வரும் வரை நீங்கள் ஏன் காத்திருக்க முடியாது? எங்களுக்கு விசாரணை அமைப்பில் நம்பிக்கை உள்ளது. எனது தந்தை 25 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார், இதுதான் அவருக்கு நடக்கிறது.

தனக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.நான் ஒரு வியாபாரிகளிடம் பேசியதில்லை அல்லது போதை மருந்துகளை என் வாழ்க்கையில் எடுத்ததில்லை. நான் ஒரு இரத்த பரிசோதனைக்கு தயாராக உள்ளேன்.

சுஷாந்த் கஞ்சா புகைத்தார், நான் அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்.

நடிகர் சுஷாந்தின் விரக்தி குறித்து நடிகரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அவரை விட்டு விலகி விட்டனர்.

எனது சுஷாந்த் சிங் என்னை நேசித்தார், அவரை அவரது குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தவில்லை.

என்மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. நான் அவரிடமிருந்து ஒரு ரூபாயையும் எடுக்கவில்லை. என்னை அமலாக்க இயக்குநரகம் விசாரிக்கிறது. சுஷாந்தின் வங்கி அறிக்கைகள் பொது களத்தில் உள்ளன. நாங்கள் சம பங்காளிகளாக இருந்த ஒரு நிறுவனம் இருந்தது.

நான் கைது செய்யப்படுவேன் என்று நினைக்க வேண்டாம். கைது செய்ய நான் எதுவும் செய்யவில்லை. என் அம்மாவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம், அவர் மனது அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்.என் அப்பா துன்புறுத்தப்படுகிறார்.

இது நியாயமற்றது, அநியாயமானது. அபத்தமான செய்திகளின் அடிப்படையில் அவர்கள் நம்பும் விஷயங்களை முழு தேசமும் நம்புகிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com