திரையரங்குகளில் பரவசமடைவோரை வீடியோ எடுக்க வேண்டாம்: சூர்யா

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த கருப்பு திரைப்படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
திரையரங்குகளில் பரவசமடைவோரை வீடியோ எடுக்க வேண்டாம்: சூர்யா
Published on

சென்னை,

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த கருப்பு திரைப்படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல் 3 நாள்களில் 147 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

நாட்டார் தெய்வமான கருப்பசாமி குறித்த திரைப்படம் என்பதால் தமிழகம் முழுக்க பல திரையரங்குகளில் படம் பார்த்த மக்கள் பரவசமடைந்து சாமியாடும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு. உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன்

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com