எதிர்கால கவலைகள் வேண்டாம் - ராதிகா ஆப்தே

எதிர்காலம் குறித்து கவலைகள் வேண்டாம் என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
எதிர்கால கவலைகள் வேண்டாம் - ராதிகா ஆப்தே
Published on

ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

எதிர்காலத்தை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இப்போதைய நாட்களை யாரும் அதிருப்தியாக கழிக்காதீர்கள். எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ என்று பயப்பட வேண்டாம். வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே நான் பயந்தது இல்லை. தற்போது லண்டனில் இருக்கிறேன்.

கொரோனா ஊரங்கினால் நிறைய ஓய்வு கிடைத்துள்ளது. எட்டு வருடங்களாக சினிமாவில் நடித்து பிஸியாகவே இருக்கிறேன். இந்த ஊரடங்கு ஓய்வை ஆக்கப்பூர்வமாக செலவிடுகிறேன். புத்தகங்கள் படிக்கிறேன். சில கதைகளையும் எழுதி வைத்து இருக்கிறேன். இன்னும் சில கதைகள் எழுதவும் தயாராகிறேன். ஊரடங்கில் புதிய எண்ணங்கள் எனக்குள் உதயமாகிறது. சினிமா தொழிலை ஒதுக்கி வைத்து விட்டு ஓட்டல் ஆரம்பிக்கும் எண்ணமும் வந்தது. சமீபத்தில் ஒரு குறும்படம் இயக்கினேன். அது சர்வதேச திரைப்பட விழாவுக்கும் தேர்வானது. படங்கள் இயக்கும் ஆர்வமும் உள்ளது. எனக்கு சமைப்பது பிடிக்கும். ஊரடங்கில் விதம் விதமாக சமைக்கிறேன்.

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com