டாக்டர் ராஜசேகருடன் மகள் இணைந்து நடிக்கும் படம்

டாக்டர் ராஜசேகர் இதுவரை 90 படங்களில் நடித்து இருக்கிறார். 91-வது படம், ‘சேகர்’ என்ற பெயரில் தயாராகிறது.
டாக்டர் ராஜசேகருடன் மகள் இணைந்து நடிக்கும் படம்
Published on

ராஜசேகர் கதைநாயகனாக நடிக்கிறார். அவருடைய மனைவி ஜீவிதா இயக்குகிறார். ஒரு முக்கிய வேடத்தில், மூத்த மகள் சிவானி ராஜசேகர் நடிக்கிறார்.

படத்தில் ராஜசேகரும், மகள் சிவானியும் தந்தை-மகளாகவே நடிக்கிறார்கள்.

பீரம் சுதாகர ரெட்டி, சிவானி ராஜசேகர், சிவாத்மிகா ராஜசேகர், போகரம் வெங்கட் சீனிவாஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி டைரக்டர் ஜீவிதா கூறும்போது, இந்தப் படத்தில் வரும் அப்பா-மகள் இடையேயான காட்சிகள், ரசிகர்களுக்கு ஈர்ப்பை தரும். இருவரும் நிஜ

வாழ்க்கையில் எப்படியிருக்கிறார்களோ, அப்படியேதான் திரையிலும் தெரிவார்கள். இரண்டு பேர் தொடர்பான காட்சிகளும் யதார்த்தமாக இருக்கும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com