அல்லு அர்ஜுனை சந்தித்த ''டிராகன்'' பட இயக்குனர்


Dragon director meets Allu Arjun
x
தினத்தந்தி 9 Sept 2025 2:45 AM IST (Updated: 9 Sept 2025 2:45 AM IST)
t-max-icont-min-icon

அல்லு அர்ஜுன் , அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

''புஷ்பா'' பட நடிகர் அல்லு அர்ஜுனை டிராகன் பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2020-ம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கி பிரபலமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'டிராகன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 51' படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மறுபுறம், அல்லு அர்ஜுன் , அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

1 More update

Next Story