‘திரௌபதி 2’...கவனம் ஈர்க்கும் வில்லனின் பர்ஸ்ட் லுக்

இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பித்து அரியலூரில் நிறைவடைந்ததுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதில் சிராக்ஜானி முகமது பின் துக்ளக்காக நடித்துள்ளார். இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story






