"கனவு நிஜமானது".. ஹாலிவுட்டில் கால்பதித்த வரலட்சுமி


கனவு நிஜமானது.. ஹாலிவுட்டில் கால்பதித்த வரலட்சுமி
x
தினத்தந்தி 26 Jun 2025 8:45 AM IST (Updated: 26 Jun 2025 8:45 AM IST)
t-max-icont-min-icon

இந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் வரலட்சுமி சரத்குமார் கால்பதிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் ஜொலித்து வரும் வரலட்சுமி, நடனக்கலையிலும் வல்லவர் ஆவார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று கலக்கி வருகிறார்.

இவர் தற்போது விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்திலும், விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் வரலட்சுமி கால்பதிக்கிறார். சந்திரன் ருட்னம் இயக்கும் புதிய ஹாலிவுட் படத்தில் ஜெர்மி ஐயன்ஸ் உடன் அவர் இணைந்து நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடந்து வருகிறது. இந்தப் படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இதுகுறித்து வரலட்சுமி கூறும்போது, "ஹாலிவுட்டில் அறிமுகமாவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. என் கனவு நிஜமாகி இருக்கிறது'', என்றார். வரலட்சுமிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1 More update

Next Story