'சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது' - நடிகை பூஜா ஹெக்டே

சிறுவயதில் இருந்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாக நடிகை பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது' - நடிகை பூஜா ஹெக்டே
Published on

தமிழில் ஜீவாவின் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக வந்தார். தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூஜா ஹெக்டே மும்பையில் சொந்த வீடு வாங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "சிறுவயது முதலே சொந்த வீடு வாங்க எனக்கு கனவு இருந்தது. இந்த ஆண்டுதான் அந்த கனவு நிறைவேறியது. மும்பையில் புதுவீடு வாங்கி அதை எனக்கு ஏற்றபடி மாற்றி இருக்கிறேன். தொழில் ரீதியாக நாம் எவ்வளவு மன உளைச்சலோடு இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் அது எல்லாம் பறந்து போக வேண்டும். என் வீட்டை அதற்கு ஏற்றவிதமாக அமைத்துக் கொண்டேன். வீடு என்பது நம்மை நம்மைப் போலவே இருக்க வைக்கும் ஒரு இடம். இங்கு இருக்கும் ஒவ்வொரு பொருளும் நமது சிறப்பு தன்மையை தெரியப்படுத்துவது போல இருக்க வேண்டும். வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் எனக்குப் பிடித்த மாதிரி டிசைன் செய்து கொண்டேன். நான் நடிகை என்பதால் எனது படுக்கை அறையில் சினிமாக்களை பார்ப்பதற்கு என்று ஒரு ப்ராஜெக்ட்டர் வைத்துள்ளேன். சமையல் அறை, ஹால் போன்றவற்றையும் என் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com