ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையில் களமிறங்கிய "திரிஷ்யம் 3"!

மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையில் களமிறங்கிய "திரிஷ்யம் 3"!
Published on

சென்னை,

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்3’. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான திரிஷ்யம் 2 முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ‘திரிஷ்யம்’ 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் , இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்தது. இதற்கிடையில், "திரிஷ்யம் 3" திரைப்படம்ரிலீசுக்கு முன்பே உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, இந்த படம் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டுமே ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com