திரிஷ்யம் 3 - புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.
திரிஷ்யம் 3 - புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Published on

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனை தொடர்ந்து, தற்போது‘திரிஷ்யம்’ 3ம் பாகம் உருவாகியுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது. மோகன்லாலும் மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com