‘சதுரங்க வேட்டை’ படத்தை நினைவுபடுத்தும் ‘ட்ரோன்ஸ்’ - நட்டி நடராஜ்

நடிகர் நட்டி நடராஜ், ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ படத்தை நினைவுபடுத்தும் ‘ட்ரோன்ஸ்’ - நட்டி நடராஜ்
Published on: 

சென்னை,

இளம் படக்குழுவினரின் துணிச்சலான முயற்சிக்குக் கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹாரர், பேண்டஸி கதையில் படம்

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து 'ட்ரோன்ஸ்' படத்தின் கதை உருவாகியுள்ளது. ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் அம்சங்கள் கலந்த வித்தியாசமான திரைக்கதையில், மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி உள்ளிட்ட புதிரான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர். ராகவ் மிர்தாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

காமடி வித் பேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் மார்கன் பிலிம்ஸ் சார்பில் ஜி.எம். மார்கன் தயாரித்துள்ளார். இதில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 16ந் தேதி வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘சதுரங்க வேட்டை’ படத்தை நினைவுபடுத்துகிறது!

இந்தநிலையில், நடிகர் நட்டி நடராஜ், ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளம் படக்குழுவினரின் துணிச்சலான முயற்சிக்குக் கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தை வெளியிட்டபோது ஏற்பட்ட அனுபவம் தற்போது நினைவுக்கு வருகிறது. வித்தியாசமான கதைக்களம், புதிய கருத்து என உருவான அந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் குறைந்த அளவிலான திரையரங்குகளில்தான் காட்சிகள் ஒதுக்கப்பட்டன. தொடக்கத்தில் சில சவால்களைச் சந்தித்தாலும், பின்னர் ரசிகர்களின் வாய்மொழிப் பாராட்டுகள் மூலம் படம் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு நடந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்திலும் அதே பயணத்தைப் பார்க்கிறேன். இளம் படக்குழுவினர் துணிச்சலாக மேற்கொண்ட இந்த முயற்சி ரசிகர்களின் மனங்களை வென்று, திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்படுவது பெருமையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

படக்குழுவினருக்கு வாழ்த்து!

மேலும், ‘ட்ரோன்ஸ்’ படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நட்டி நடராஜ், இந்த வெற்றி அவர்களுக்குத் தகுதியானது , வார இறுதியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தைப் பார்க்குமாறும் அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நட்டி நடராஜின் இந்தப் பாராட்டு, படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com