‘ஜெயிலர் 2’ படத்துடன் மோதும் ‘டிரோன்ஸ்’ - நடிகை சித்தி இத்னானி சொன்னது என்ன?

மந்திரம், மாயாஜாலம் என கற்பனை உலகை தழுவி படைக்கப்பட்ட ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வருகிற 16-ந் தேதி திரைக்கு வருகிறது.
‘ஜெயிலர் 2’ படத்துடன் மோதும் ‘டிரோன்ஸ்’ - நடிகை சித்தி இத்னானி சொன்னது என்ன?
Published on: 

சென்னை,

ரஜினி படத்துடன் எங்கள் படம் வெளியாவது பெருமையாக இருக்கிறது என நடிகை சித்தி இத்னானி டிரோன்ஸ் பட விழாவில் பேசியுள்ளார்.

‘டிரோன்ஸ்’ திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். மந்திரம், மாயாஜாலம் என கற்பனை உலகை தழுவி படைக்கப்பட்ட இந்த திரைப்படம் வருகிற 16-ந் தேதி திரைக்கு வருகிறது.

‘ஜெயிலர் 2’ படத்துடன் மோதும் ‘டிரோன்ஸ்’

சென்னையில் நடந்த பட விழாவில் சித்தி இத்னானி பேசுகையில், ''ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' திரைப்படம் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. 'டிரோன்ஸ்' படம் மறுநாள் வெளியாகிறது. ரஜினி படத்துடன் இந்த படத்தை ஏன் வெளியிடுகிறார்கள்? என்ற கேள்வி நிச்சயம் இருக்கும். உண்மையை சொல்லவேண்டும் என்றால், ரஜினி படத்துடன் எங்கள் படம் வெளியாவது பெருமையாக இருக்கிறது. 'ஜெயிலர்-2' படத்தை பார்க்க நாங்களும் ஆவலாகவே இருக்கிறோம்.

அதேநேரத்தில், இது நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் நிறைந்த காலம். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறிய, சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக 'டிரோன்ஸ்' இருக்கும் என்று நம்புகிறோம். பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெற்றிபெறுவது வழக்கம்தான். ஆனால் எங்களைப் போன்ற சிறிய படங்களும் வெற்றிபெற வேண்டும் அல்லவா...", என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com