போதைப்பொருள் வழக்கு: நடிகர் நவ்தீப் வீட்டில் அதிரடி சோதனை

போதைப்பொருள் வழக்கு: நடிகர் நவ்தீப் வீட்டில் அதிரடி சோதனை
Published on

தமிழில் 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் நடித்து பிரபலமானவர் நவ்தீப். 'நெஞ்சில்', 'ஏகன்', 'சொல்ல சொல்ல இனிக்கும்', 'இது என்ன மாயம்', 'சீறு' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரையும் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்த நடிகர் நவ்தீப்பை தேடி வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித் தார். இது பரபரப்பானது.

போதை கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று நவ்தீப் மறுத்தார். கோர்ட்டிலும் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நவ்தீப் வீட்டில் இல்லை.

சோதனையில் சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதான ராம் சந்த் என்பவரிடம் இருந்து நவ்தீப் போதைப் பொருள் வாங்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com