போதைப்பொருள் விவகாரம் - நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை


Drug case - Actor Srikanth interrogated
x
தினத்தந்தி 23 Jun 2025 1:24 PM IST (Updated: 24 Jun 2025 12:22 PM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான 'ரோஜாக்கூட்டம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக இவர் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " இந்த படத்தில் நடித்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி வெளியான இப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்றது.

1 More update

Next Story