போதைப்பொருள் வழக்கு: பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது

மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






