போதைப்பொருள் வழக்கு; ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணா கூறியிருந்தார்.
போதைப்பொருள் வழக்கு; ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Published on

சென்னை,

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார். அதேபோல, இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார்.

போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணா தனது மனுவில் கூறியிருந்தார். அதே சமயம், இருவருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்ப்பை கோர்ட்டு ஒத்திவைத்து இருந்தது.

இந்த ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com