போதை பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு சம்மன்

விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை ரியாவுக்கு போதைபொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
போதை பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு சம்மன்
Published on

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ. வசம் வந்த பிறகு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது அவரது வாட்ஸ் அப் உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. சுஷாந்த் சிங்கை கொலை செய்து விட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங்குக்கு தெரியாமல் ரியா டீயில் போதை பொருளை கலந்து கொடுத்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் சிங் வீட்டு மேலாளர் சாமியூல் மிராண்டா ஆகியோரிடம் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர். அவர்கள் ரியா கேட்டுக்கொண்டதன்பேரில் சுஷாந்த் சிங்குக்கு போதை பொருள் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை ரியாவுக்கு போதைபொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நேற்று காலை ரியா வீட்டுக்கு நேரில் சென்று சம்மனை வழங்கினர். இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com