குடிபோதையில் காரை ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம்

குடிபோதையில் காரை ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம், அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
குடிபோதையில் காரை ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம்
Published on

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நான் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில், என் சக நடிகரை அவருடைய வீட்டில் இறக்கி விட்டு, என் வீட்டை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தேன். வாகன சோதனை செய்யும் போலீசார் என் காரை நிறுத்தினார்கள். என் லைசென்சும், மற்ற ஆவணங்களும் வேறு ஒரு பையில் இருந்தன.

அதனால் அவற்றை போலீசாரிடம் காண்பிக்க முடியவில்லை. நான் போதையில் இருந்திருந்தால், என்னை எப்படி காரை ஓட்ட அனுமதித்து இருப்பார்கள்?

என்னை பற்றி எந்த செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. போதையில் இருந்தவரை விட்டு விட்டு, எல்லோரும் என்னை ஏன் குறிவைக்கிறார்கள்? தனிப்பட்ட சுதந்திரம் இங்கே இல்லை. எனக்கு வேலை இருப்பதால், அதை கவனிக்கிறேன். கடவுள் பார்த்துக் கொள்வார். இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com