

சென்னை,
திரையுலகைச் சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். அந்தவகையில், சமீபத்தில், பாபநாசம் பட நடிகை எஸ்தர் அனில் சொன்ன வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
தான் குடிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அது தனக்கு சரியாக இருக்காது என்று உணர்ந்ததால் அதை கைவிட்டதாகவும் கூறினார்.
அவர் கூறுகையில், "நான் முதல் முறையாக மது குடித்தபோது, என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எழுந்திருக்க கூட முடியவில்லை, அந்த சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. வீடு திரும்பிய பிறகு, நான் நாள் முழுவதும் தூங்கினேன். அதன்பின் அதை கைவிட்டேன்'' என்றார்.
View this post on Instagram