

சென்னை,
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'யானை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அருண் விஜய் மற்றும் ராதிகா சர்த்குமார் ஆகியோர் சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகளை முடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து தான் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.