'விடாமுயற்சி' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது..
'விடாமுயற்சி' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.

'விடாமுயற்சி' படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் பட வேலைகள் எதிர்பார்த்த நாட்களுக்குள் முடியாததால் விடாமுயற்சி திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் ரசிகர்களும் அஜித்தின் அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் டீசர் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமீப காலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று (அக்டோபர் 28) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக, படக்குழு சில புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com